மத்திய பட்ஜெட் : ஒரு கோடி பேரை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம்!

இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து 7வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து 3வது முறையாக ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.எங்கள் கொள்கை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கைதான் இந்த வெற்றி; அதனை நிறைவேற்றுவோம்.
இந்தியாவில் விலைவாசி விகிதம் கட்டுக்குள் உள்ளது. இந்தியாவில் பணவீக்கம் மேலும் குறைந்து 4%ஆக சரிவடையும். சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இருந்தபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாகவே உள்ளது.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை அடிப்படையாக கொண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய 9 முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது.
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் ‘பிஎம் கரீப் அன்ன யோஜனா’ திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். கல்வி, தொழில்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்காக 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கான பிரதமரின் 5 அம்சத் திட்ட அமலாக்கம் இதற்காக ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கல்வி ஆகியவை பிரதமரின் 5 அம்சத் திட்டத்தில் அடங்கும்.
வேளாண் துறைகளுக்கு ரூ. 1.52 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் முன்னெடுப்பால் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். நிலக்கடலை, எள், சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் வகுக்கப்படும்.
உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ரூ. 10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும். ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும். பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக விடுதி மற்றும் குழந்தை பராமரிப்பகங்கள் ஏற்படுத்தப்படும்.
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்புக்கு 3 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும். புதிதாக நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படும் நபர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை அரசு வழங்கும். ஒரு மாத ஊதியம் ரூ.15,000க்கு உட்பட்டு இருக்கும்பட்சத்தில் அரசே வழங்கும். திட்டத்தின் மூலம் 2.1 கோடி இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்களை அறிமுகப்படுத்த திட்டம் வகுக்கப்படும்.
பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நாடு முழுவதும் 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. 102 வகை புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா