நடுவானில் இன்ஜின் கோளாறு.. நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. 5 பேர் பரிதாப பலி!

 
விமான விபத்து

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில்லியில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகில் இன்று சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. தரையில் மோதியதால் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். Nashville Metropolitan Police அவர்கள் விமானம் விபத்துக்குள்ளான புகைப்படத்தை X பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

விமானம் நடுவானில் இருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஜான் சி டியூன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், என்ஜின் கோளாறு காரணமாக விமான நிலையத்தை நெருங்கும் முன்பே விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web