விமான சாகசத்தில் மோதிக்கொண்ட விமானங்கள்..!! 2 பேர் பலி!!

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடைபெற்றது. அப்போது வானில் சாகசம் செய்து காட்டுவதற்காக ஏராளமான விமானங்கள் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இதில் டி-6 கோல்டு என்ற விமானம் மற்றொரு விமானம் மீது மோதியது. இதனால் மோதிக்கொண்ட 2 விமானங்களும் தரையில் வேகமாக விழுந்து நொறுங்கியது.
விமானம் தரையில் மோதி நொறுங்கியது விமானிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ரெனோ ஏர் ரேசிங் அசோசியேஷன் அதிகாரிகள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
“பிற்பகல் 2.15 மணிக்கு டி-6 தங்கப் போட்டியின் முடிவில் 2 விமானங்கள் மோதிக்கொண்டன” என தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...