”ப்ளீஸ் கொன்னுடாதீங்க” இளம்பெண் கதறல்.. இஸ்ரேலில் கொடூரம்...!!

 
இஸ்ரேல்

இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே போர்  நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பில் இஸ்ரேலில் காசா நகருக்குள் நுழைந்து கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்தாலும் காசா நகரை விட்டு வெளியேறும் படி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.   இந்நிலையில், 25 வயதான நோவா அர்காமணி என்ற இளம்பெண், அவருடைய ஆண்நண்பர்   அவி நாதனுடன் சென்ற போது அவர்கள் இருவரும் ஹமாஸ் அமைப்பிடம் சிக்கிக் கொண்டனர். காதலர்களை   ஹமாஸ் அமைப்பினர் பிடித்து, தாக்கியுள்ளனர். 


 


அந்த பெண்ணை அவர்களின்  பைக்கில் கட்டாயப்படுத்தி அமர வைத்து கடத்திச் சென்றனர். அப்போது அந்த பெண், “ப்ளீஸ் என்னை கொன்னுடாதீங்க” எனக் கெஞ்சுகிறாள் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதே போல் இஸ்ரேலில் அமைதிக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில்   ஹமாஸ்   அமைப்பினர் யாரும் எதிர்பார்க்காத வேளையில் தாக்குதல் நடத்த தொடங்கினர்.   அமைதி வேண்டி நடந்தப்பட்ட கூட்டத்தில்  600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  


 

அந்த தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் உடலை அரை நிர்வாணப்படுத்தி, ஹமாஸ் போராளிகள் தங்களது திறந்த ட்ரக்கில் நகரம் முழுவதும் எடுத்து சென்ற  காட்சிகளும் வெளியாகின.  உலக நாடுகள் அனைத்தும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.  இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய அமைப்பினர் ராணுவ அதிகாரிகள்,  பொதுமக்களை கொன்று பிணைக் கைதிகளாக பிடித்து வருகின்றனர்.   தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் உடல்களை திறந்த லாரிகளில் ஏற்றி ஊர்வலம் சென்றனர். இந்த வீடியோ காண்பவர்களை பதற வைக்கிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web