பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை!
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி கரட்டு கொட்டாய் பகுதியில் தங்கராஜ் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது நிவேதா படிக்காமல் செல்போன் பயன்படுத்திக் கொண்டதாக பெற்றோர் கண்டித்தனர்.

மனமுடைந்து மாணவி வீட்டில் இருந்த 30க்கும் மேற்பட்ட சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை ஓமலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனளிக்காததால், மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
