ஐ.என்.எஸ். விக்ராந்தில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ!

 
மோடி

தீபாவளி பண்டிகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலுக்கு சென்று வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார்.

கடற்படை வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த பிரதமர், பின்னர் உரையாற்றினார். அதில் அவர் கூறுகையில், “இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் காட்டும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு கடந்த சில ஆண்டுகளில் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. குறிப்பாக மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ள சாதனை வரலாற்றுச் சிறப்புடையது.


2014க்கு முன் நாட்டில் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவை வெறும் 11 மாவட்டங்களுக்கு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. அதிலும் 3 மாவட்டங்களில் மட்டுமே அவர்களின் ஆதிக்கம் மீதமுள்ளது. இது பாதுகாப்புப்படை வீரர்களின் வீரமும் மக்களின் ஒற்றுமையும் இணைந்த வெற்றியாகும்.

தீபாவளி

இன்றைக்கு 100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலிலிருந்து முழுமையாக விடுபட்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடுகின்றன. நாட்டின் ஒவ்வொரு மூலையும் பாதுகாப்பு, அமைதி, வளர்ச்சியுடன் நிலை நிற்கும் வரை நமது போராட்டம் தொடரும்” என பிரதமர் வலியுறுத்தினார். கடற்படை வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடிய இந்த நிகழ்வு, தேச பாதுகாப்பில் வீரர்களின் பங்கை பிரதமர் பாராட்டிய நிகழ்வாக அமைந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?