பிரதமர் மோடி மகளிர் உலகக் கோப்பை சாம்பியன்கள் சந்திப்பு ..!
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பிரதமர் நரேந்திர மோடி தனது லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் புதன்கிழமை சந்தித்து வாழ்த்தினார். தொடர்ச்சியான மூன்று தோல்விகளுக்குப் பிறகு அணியினர் தன்னம்பிக்கையுடன் மீண்டு சாம்பியன் பட்டம் வென்றதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அணி சார்பில் வீராங்கனைகள் “நமோ 1” என அச்சிடப்பட்ட கையொப்ப ஜெர்சியை பிரதமருக்கு பரிசளித்தனர்.
அந்த நேரத்தில் பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் உடனிருந்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2017-இல் கோப்பை இன்றி பிரதமரை சந்தித்ததை நினைவு கூர்ந்து, “இப்போது கோப்பையுடன் வந்துள்ளேன்; இனி அடிக்கடி சந்திக்க விரும்புகிறேன்” என்று கூறி அனைவரையும் கவர்ந்தார். துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பிரதமரின் ஊக்கவுரை எப்போதும் தங்களை முன்னேறச் செய்ததாகவும், பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க வழி வகுப்பவர் மோடியே என்றும் பாராட்டினார்.

தீப்தி ஷர்மா, 2017-இல் பிரதமர் கூறிய “கனவை அடைய கடினமாக உழை” என்ற வார்த்தைகள் தான் இன்றைய வெற்றிக்கு ஊக்கமென கூறினார். அவருடைய “ஜெய் ஸ்ரீ ராம்” இன்ஸ்டாகிராம் பதிவையும், கையில் இருந்த அனுமன் பச்சை குத்தையும் பிரதமர் கவனித்ததாக தெரிவித்தார். ஹர்மன்ப்ரீத், “எப்போதும் நிகழ்காலத்தில் அமைதியாக இருக்க நீங்கள் எப்படி முடிகிறது?” என கேட்டதற்கு, “அது எனது பழக்கம்” என பிரதமர் சிரித்தபடி பதிலளித்தார். ஹர்லீன் தியோலின் அற்புத கேட்ச் முதல் அமன்ஜோத் கவுரின் லாரா வோல்வார்ட்டை ஆட்டமிழக்கிய தருணம் வரை பிரதமர் ஆர்வத்துடன் விவாதித்தார். இறுதியாக, சிறுமிகள் உடற்பயிற்சியிலும் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், “ஃபிட் இந்தியா” செய்தியை பரப்புமாறு வீராங்கனைகளிடம் கேட்டுக் கொண்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
