நாளை மோடி மீண்டும் தமிழகம் வருகை... ட்ரோன்கள் பறக்கத் தடை!

 
மோடி

இந்தியாவில் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், பிரச்சார வியூகம் என மும்மூரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் நீதிமய்யம் திமுகவுடன் இணைந்துள்ளது. பாஜகவுடன் பாமக ஜோடி சேர்ந்துள்ளது. மற்ற கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் என அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி தமிழகத்தில் பாஜகவை நிலைநிறுத்த அடிக்கடி தமிழகம் வரத் தொடங்கியுள்ளார். அதன்படி நாளை மார்ச் 15ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தின் தென்முனையான கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார்.

மோடி ட்ரோன்

இங்கு நடைபெறும்  பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி உரையாற்ற உள்ளார். பார்லிமென்ட் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கட்சிகள் கூட்டணி ஆலோசித்து, வேட்பாளர் தேர்வு, பிரசார திட்டமிடல் என, பா.ஜ., ஏற்கனவே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மோடி பல்வேறு மாநிலங்களில் பாஜக பேரணிகளில் தீவிரமாக கலந்து கொண்டு உரையாற்றி  ருகிறார், குறிப்பாக தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தி, கட்சி தனது இருப்பை உறுதிப்படுத்தி வருகிறார்.  அதன்படி தமிழகத்தில், சமீபத்தில் பல்லடம், திருநெல்வேலி, சென்னை ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார்.  

மோடி

தற்போது கன்னியாகுமரியில் மற்றொரு பிரசார நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார்.  கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் பேரணியில் மோடி  கலந்து கொள்கிறார். கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வருகை தரும் மோடிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  கேரளா வரும்  மோடியின் பயணத்தில்  பலவித மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web