பிரபல ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு பதிவு... இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டு... !

 
வருண்குமார்

இந்திய ஆக்கி அணி வீரர்களில்  குறிப்பிடத்தக்கவர் வருண் குமார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வருண்குமார் இடம்பெற்றிருந்தார். அந்த ஆண்டு இந்தியா  தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன்  2020 டோக்கியோ ஒலிம்பிக்கில்வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார். வருண்குமார் 2021ல் அர்ஜுனா விருதும் பெற்றுள்ளார்  .

வருண்குமார்


இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்து போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருண்குமார் தன்னுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண்  ஒருவர் பெங்களூரு   ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

வருண்குமார்

இந்த  புகாரின் அடிப்படையில் ஆக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து அந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன்  இதன் பிறகு  திருமணம் செய்வதாக உறுதி அளித்து தன்னை  ஏமாற்றிவிட்டதாகவும் அந்தப்   புகாரில் தெரிவித்துள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web