கவிஞர் சினேகனின் தந்தை மரணம்.. இன்று தஞ்சையில் இறுதிசடங்குகள்!
கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் சினேகரின் தந்தை தஞ்சையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 101.
தமிழ் திரையுலகில் “புத்தம் புது பூவே” திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான சினேகன் இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். கவிஞர், நடிகர், அரசியல்வாதி என பன்முக ஆளுமையாக திகழும் சினேகனின் தந்தை சிவசங்கு.
சினேகனின் தந்தை சிவசங்கு (101), வயது மூப்பு காரணமாக நேற்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். இது குறித்து சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது தந்தையார் அதிகாலை காலமானார். இன்று அக்டோபர் 28ம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் நடைபெறும்” என பதிவு வெளியிட்டுள்ளார்.

சினேகனின் தந்தையின் மறைவுச் செய்தி திரையுலகிலும், அவரது ரசிகர்கள் மத்திலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
