பிரியாணியில் விஷம்... 7 மயில்கள், 6 ஆடுகள் உயிரிழப்பு!
தமிழகத்தில் கோயம்புத்தூரை அடுத்துள்ள காரமடை குமரன் குன்று பகுதியில் விஷம் வைத்த பிரியாணியை சாப்பிட்ட 7 மயில்கள் பரிதாபமாக அடுத்தடுத்து உயிரிழந்தன.
கோவையை அடுத்த காரமடை அருகில் உள்ள குமரன்குன்று முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக காரமடை வனச்சரக அலுவலகத்திற்கு இன்று காலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வனச்சரகர் ரஞ்சித் உள்ளிட்டோர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அதில் முருகன் கோயில் நிலத்தில் பிரியாணியில் விஷம் வைத்த உணவை உட்கொண்ட 7 மயில்கள், 6 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் உயிரிழந்த மயில்களும், ஆடுகளும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!