கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. பாயாசத்தில் விஷம் வைத்து நண்பன் குடும்பத்தையே தீர்த்து கட்டிய நபர்..!

 
சுரேஷ்

தேனி மாவட்டம் போடி அருகே காமாட்சியம்மன் கோயில் தெருவில் நகை பட்டறை நடத்தி வருபவர் சுரேஷ் (35). இவரது நண்பர் ராஜ்குமார். இவரது மனைவி செல்வமாரி, 37. இவர்களுக்கு விக்னேஷ், (15)சௌந்தர்யா, (11) குபேந்திரன், (6) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். ராஜ்குமார் பக்கத்து வீட்டில் வசிப்பவர் கீதா, (32), இவருக்கும் சுரேஷுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. கடந்த 2013ஆம் ஆண்டு தொழில் வளர்ச்சிக்காக ராஜ்குமாரிடம் நான்கரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார் சுரேஷ். பல நாட்களாக கொடுத்த கடனை திருப்பி கொடுக்குமாறு ராஜ்குமார் சுரேஷீடம்  கேட்டு வந்துள்ளார்.

தண்டவாள சீரமைப்புப் பணி | போடி-சென்னை ரயில் சேவை ஒத்திவைப்பு: முதல் பயணத்தை  எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம் | Rail Track Work | Postponement of  Bodi-Chennai train ...

கடனை கேட்டதால் ஆத்திரத்தில் சுரேஷ் தனது நண்பர் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு விஷம் கொடுக்க முடிவு செய்தார். இதற்காக அவர் தனது கள்ளக் காதலி  கீதா மற்றும் நண்பர்களின் உதவியை கேட்டுள்ளார். இதற்காக கீதா பாயசம் காய்ச்சி அதில் சயனைடு விஷம் கலந்து கொடுத்துள்ளார். கீதா ராஜ்குமாரின் பக்கத்து வீடு என்பதால் அப்போது அவர்களது குழந்தை சௌந்தர்யா அங்கு வரவே, கீதா குழந்தைக்கும் பாயசம் கொடுத்துள்ளார். அதை குடித்த சௌந்தர்யா மயங்கி விழுந்து இறந்தார். கீதா குழந்தையின் உடலை தனது வீட்டின் பீரோவில் வைத்து பூட்டியுள்ளார்.பின்னர், பாத்திரத்தில் பாயசத்தை எடுத்துக் கொண்டு, ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அவருக்கும் அவருடைய மனைவிக்கும் கொடுத்துள்ளார். 

அப்போது செல்வமாரி, "என்ன கொண்டு வந்து கொடுத்தாய்?" என்று அலறினர். உடனே கீதா தன் வீட்டிற்கு ஓடினார். அவருடன் சென்ற சுரேஷ், அவரது நண்பர்கள் காமாட்சி, கணேசன், விஜயராம் ஆகியோரும் தப்பி ஓடினர். இதனால் பீதியடைந்த கீதா, வீட்டுக்குச் சென்று மீதம் இருந்த பாயசத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் கீதாவின் வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர் கீதா மற்றும் சௌந்தர்யாவின் உடல்களை  மீட்டனர். உயிருக்கு போராடிய ராஜ்குமார் மற்றும் அவரது மனைவியை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர். இதனையடுத்து சுரேஷ்,  காமாட்சி, விஜயராம், கணேசன் ஆகிய 5 பேர்மீது போடி போலீசார் வழக்கு பதிவுசெய்து, அவர்களைக் கைது செய்தனர். 

Theni, Theni : தேனி: தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நுகர்வோர்  நீதிமன்றத்தில் அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல் பயனாளிக்கு இழப்பீடு ...

இந்த வழக்கு விசாரணையில் இருந்த காலத்தில்   காமாட்சி உயிரிழந்தார். தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில், சுரேஷுக்கு ஆயுள் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம், விஜயராமிற்கு 10 ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கணேசன் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web