வெள்ளி வியாபாரி கொலை விவகாரம்: நம்பர் பிளேட் இல்லாத கார் ஏற்றி கொலை..? தீவிர விசாரணையில் போலீசார்..!
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் வெள்ளி வியாபாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். வெள்ளி வியாபாரியை கார் ஏத்தி கொன்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (47). இவரது மனைவி சொர்ணலதா (40). வெள்ளி வியாபாரி சங்கர், கடந்த 2ம் தேதி காலை வீட்டில் இருந்து பால் வாங்க அச்சிராமன் தெரு வழியாக கடைக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கருப்பு நிற கார் சங்கர் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது.
இதில், தூக்கி வீசப்பட்ட சங்கருக்கு தலை, கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து பலத்த காயமடைந்த சங்கரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது, விபத்து நடந்த இடத்தை போலீசார் ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். ஷங்கர் திட்டமிட்ட காரால் கொல்லப்பட்டதைக் காட்டும் வீடியோ காட்சிகள் இருந்தன. அதை போலீசார் கைப்பற்றி விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில், அதிவேகமாக வந்த கார், நிற்காமல் சங்கர் மீது மோதியதும், காரின் நம்பர் பிளேட் இல்லாததும் தெரியவந்தது.
மேலும், இந்த கார் கடந்த 2ம் தேதி அதிகாலை செவ்வாய்பேட்டை போலீஸ் குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டு, சங்கர் வீட்டை விட்டு வெளியே வந்ததாக யாரோ கார் டிரைவருக்கு தகவல் கொடுத்ததும், அங்கிருந்து வேகமாக வந்த கார், சங்கர் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றது தெரிய வந்தது.
தொழில் போட்டி காரணமாக சங்கரை கார் ஓட்டி கொன்றார்களா? அல்லது சில உறவினர்கள் சொத்துக்காக கொன்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நம்பர் பிளேட் இல்லாத சங்கர் மீது மோதிய காரை போலீசார் தேடி வருகின்றனர். கார் மற்றும் கார் டிரைவர் பிடிபட்டால், வெள்ளி வியாபாரி சங்கர், கார் ஏத்தி கொல்லப்பட்டரா அல்லது விபத்து நடந்ததா? என்பது தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க