வருகை பதிவேட்டில் கையெழுத்திடாத ஊழியர்.. தட்டிக்கேட்ட அதிகாரி மீது சரமாரி தாக்குதல்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வேளாண் அதிகாரியை தாக்கிய ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் வேளாண்மை துணை இயக்குனர் மனோரஞ்சிதம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்காக சென்றபோது, அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்துள்ளார்.
அதில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் தனபாலன் நீண்ட நாட்களாக வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருந்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் மனோரஞ்சிதம் கேட்டதற்கு தனபாலன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றவே அதிகாரியை தனபாலன் பலமாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து தாக்கப்பட்ட அதிகாரியை அங்கிருந்த சக ஊழியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். உயர் அதிகாரியை தாக்கிவிட்டு தலைமறைவான ஊழியர் தனபாலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க