கொல்கத்தா அரசு மருத்துவமனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: போலீசார் கைது!

 
கொல்கத்தா

 

கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில், 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில், பவானிபூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்த ஒரு சிறுமிக்கு இந்த கொடூரம் நேர்ந்துள்ளது. பெற்றோர் சிகிச்சைக்காக வரிசையில் நின்றபோது, சிறுமி அருகில் காத்திருந்த நிலையில், அங்கிருந்த ஒருவரால் சிறுமி மறைவிடத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கொல்கத்தா

சம்பவம் நடந்த உடனே சிறுமி பெற்றோரிடம் கூறியதால், அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியின் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு, மருத்துவமனை கேமரா காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபரை அடையாளம் கண்டனர். போலீசாரின் விசாரணையில், சம்பவத்துடன் தொடர்புடையவர் மருத்துவமனையில் முன்னதாக வார்டு பணியாற்றிய அமித் மாலிக் என்பவர் என்று தெரியவந்தது. போலீசார் அமித் மாலிக்கை கைது செய்தனர்.

போலீஸ்

கடந்த ஆண்டு முதல் தொடர்ந்த பல அதிர்ச்சி சம்பவங்கள் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனைகளில் நடந்த பிறகும், தற்போது மீண்டும் நடந்த இதுபோன்ற சம்பவம், கொல்கத்தா மற்றும் அரசு மருத்துவமனை சுற்றுப்புறத்தில் நிகழ்ந்துள்ளது பெரும் கவலைகளையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!