சாலையில் கிடந்த ரூ.17.5 லட்சம் பணம் ... பெண் ஒப்படைத்ததால் காவல்துறை பாராட்டு!

 
பணம்

மதுரை நகரில் சாலை நடுவே சாக்குமூட்டையில் கிடந்த ரூ.17.5 லட்சம் பணத்தை ஒரு பெண் நேர்மையுடன் காவல்துறைக்கு ஒப்படைத்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணை காவல்துறையினர் பாராட்டியதோடு, அந்தப் பணத்தின் மூலத்தை கண்டறிய விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

பணம் ரொக்கம் லஞ்சம் பறக்கும்படை தேர்தல்

மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வமாலினி என்ற சிவபக்தர், மீனாட்சியம்மன் கோவிலில் ஆன்மீக பணிகளில் ஈடுபட்டுவருகிறார். நேற்றிரவு கோவிலில் இருந்து வீடு திரும்பும் வழியில், வக்கில் புதுத்தெரு சந்திப்பில் சாலையின் நடுவே சாக்குமூட்டை ஒன்றைக் கவனித்த அவர், அதை ஒதுக்க முயன்றபோது அதிலிருந்து 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் தெரிந்தன. உடனே அருகிலிருந்த காவல்துறையினருக்கு தகவல் அளித்த அவர், சாக்குமூட்டையைக் காவல்துறையினர் திறந்தபோது அதில் மொத்தம் ரூ.17.50 லட்சம் இருப்பது தெரியவந்தது.

போலீஸ்

பின்னர் செல்வமாலினி அந்தப் பணத்தை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அவரின் நேர்மைக்காக காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். தற்போது அந்தப் பணம் ஹவாலா பரிவர்த்தனை தொடர்பானதா அல்லது வணிகர்களின் பணமா என்பதைக் கண்டறிய பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!