சிறுவர்கள் ஓட்டி வந்த 9 பைக்குகள் பறிமுதல்.. பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயது குறைவான ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 9 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் அருள்சேகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார் இராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, அஞ்சுகிராமம் கன்னியாகுமரி பகுதியில் வாகன தணிக்கையின் போது 18 வயது குறைவாக வாகனம் ஓட்டி வந்த 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 18 வயது குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
