திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடருது... வாரிசுக்கு முடிசூட்டுவதிலேயே முதல்வருக்கு கவனம்... எடப்பாடி குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகி விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி மாவட்டம் பழூரைச் சேர்ந்த திராவிடமணி என்பவர் திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் என்பது தொடர் கதையாகிவிட்ட நிலையில், காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் திமுக முதல்வரோ, தன் வாரிசுக்கு முடி சூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துவது கண்டனத்திற்குரியது.
உயிரிழந்த திராவிட மணியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும், மரணம் குறித்த உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து, தொடர்புள்ளோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் உறுதிசெய்யுமாறு திமுக முதல் அமைச்சரை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!