தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!
குழந்தைகள் போலியோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்திலும் மாநிலம் முழுவதும் போலியோ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. போலியோ வைரஸ் பாதிப்பு அபாயம் அதிகம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில் முகாம் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
