அட்ரா சக்க... பொங்கல் சிறப்பு பரிசு ரூ2000/..?!

 
பொங்கல்

தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 45 நாட்களே உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள், திட்டமிடுதலை பொதுமக்கள்  இப்போதிருந்தே செய்யத் தொடங்கிவிட்டனர்.   ஜனவரி மாதத்தில் தை  1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் சிறப்பு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த ஆட்சியில்  இபிஎஸ் ரூ2500 வழங்கியிருந்தார்.

பொங்கல்

அதன்பிறகு ரூ1000 ஆக இது தொடர்கிறது.   அந்த வகையில் வரப்போகும்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு வழங்குவது குறித்த  ஆலோசனை கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு பதிவாளர்கள் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.  அதில் தமிழகம் முழுவதும் மகளிர்  உதவித் தொகை அனைவருக்கும் வழங்கப்படாமல் இருப்பதால் பொது மக்களின் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

பொங்கல்

அதனால் இந்த வருடம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுப் பொருட்களோடு ரூ1000 உடன் மேலும் ரூ1000 சேர்த்து ரூ2000  வழங்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.  பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய்க்கு பதில் 2000 ரூபாய் கிடைக்கப் போகிறது என்ற தகவல்   பொதுமக்களிடம்  பெரும் உற்சாகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  முதல்வரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!