சினிமாவை விட்டு விலகும் பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
aditi shankar அதிதி ஷங்கர்

இயக்குநர் ஷங்கரின் மகளும், நடிகையுமான அதிதி ஷங்கர் டாக்டர் ஏ என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தைப் பதிவு செய்து டாக்டர் உடையில் இருக்கும் படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி, சினிமாவை விட்டு விலகுகிறாரா ஷங்கர் மகள் என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் நடிகை அதிதி ஷங்கர். இவர், 2022-ல் கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்தார்.

நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் ‘மதுர வீரன்’ மற்றும் மாவீரன் படத்தில் ‘வண்ணாரப்பேட்டை’ பாடல்களையும் பாடி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்திலும், ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Aditi Shankar

இந்த நிலையில் டாக்டருக்கு படித்த நடிகை அதிதி ஷங்கர் சினிமா மீது உள்ள ஆசையில் நடிக்க வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் டாக்டர் தொழிலுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அதிதி ஷங்கர், டாக்டர் ஏ என்று பதிவு செய்து டாக்டர் உடைகளுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அடுத்த படத்தில் அதிதி ஷங்கர் டாக்டர் கேரக்டரில் நடிக்கிறாரா? அல்லது சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு டாக்டர் தொழிலுக்கு சென்று விட்டாரா? என்ற கேள்வியை ரசிகர்களை எழுப்பி வருகின்றனர். இதற்கு அதிதி ஷங்கரிடம் இருந்து விரைவில் பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web