சீரியல் நடிகையை கரம் பிடித்தார் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி.. போட்டோஸ் வைரல்..!!

 
ரெடின் கிங்ஸ்லி

பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகையை திருமணம் செய்துள்ளார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் திரைப்படங்களான கோலமாவு கோகிலா டாக்டர், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தியவர் ரெடின் கிங்ஸ்லி . இவர் தற்போதைய கோலிவுட் சினிமாவில் காமெடி நாயகனாக உருவெடுத்துள்ளவர். தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் பெருகி வரும் நிலையில், இன்று நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை  ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துள்ளார். 


சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியலில் நடித்து வரும் நடிகை சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி திடீர் திருமணம் செய்துள்ளார். இது சின்னத்திரை, வெள்ளித்திரை வட்டாரத்தினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவர்களின் திருமண தகவலை ரெடின் கிங்ஸ்லியின் சினிமா நண்பரும் பிரபல நடிகர், டான்சருமான சதீஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், புகைப்படங்களையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் “இது எந்த பட செட்டும் இல்லை. இது உண்மை” தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Image

இந்நிலையில் வெள்ளித்திரை, சின்னத்திரை உலகினரும் ரசிகர்களும் இந்த தம்பதிக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!