பிரபல காமிக் கதையாசிரியர் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!

 
 அகிரா டோரியாமா

'டிராகன் பால்' உள்ளிட்ட பிரபலமான ஜப்பானிய மங்கா காமிக்ஸை உருவாக்கிய அகிரா டோரியாமா இறந்துவிட்டதாக அவரது ஸ்டுடியோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. அவரது 'டிராகன் பால்' தொடர் காமிக்ஸ் 1984 இல் தொடங்கியது மற்றும் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது. தொலைக்காட்சி தொடர்கள், வீடியோ கேம்கள் மற்றும் திரைப்படமாக மாற்றப்பட்டது.

மார்ச் 1 ஆம் தேதி, 68 வயதான அகிரா டோரியாமா மூளையில் ஏற்பட்ட இரத்தக் கட்டிகளால் இறந்தார் என்று பேர்ட் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது. "அவர் பல தொடர்களில் பணிபுரிந்து வந்தார். அந்த வேலை முடிவடையும் என்று அவருக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது" என்று பேர்ட் ஸ்டுடியோ கூறியது.சக வரைகதை ஆசிரியர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

பேர்ட் ஸ்டுடியோஸ் 40 ஆண்டுகால ஆதரவிற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது 1955 ஆம் ஆண்டு ஜப்பானின் ஐச்சி மாகாணத்தில் பிறந்த அகிரா 1978 ஆம் ஆண்டு 'வாண்டர் ஐலேண்ட்' என்ற காமிக் தொடரின் மூலம் அறிமுகமானார். அந்தத் தொடர் மாபெரும் வெற்றியடைந்து அகிராவின் புகழ் வெளிச்சத்துக்கு வந்தபோதும், அவர் தனியாகவே இருந்தார். 1982ல் ஒரு நேர்காணலில், 'எனக்கு மங்கா எழுதினால் போதும்' என்றார்.

 'டிராகன் பால்' சன் கோகு என்ற சிறுவனின் ஏழு மேஜிக் பந்துகளுக்கான தேடலை மையமாகக் கொண்ட கதை. இது உலகம் முழுவதும் 26 மில்லியன் பிரதிகள் விற்றது. இவர் 2000ஆம் ஆண்டு உருவாக்கிய 'மணல் நிலம்' கதையைத் தழுவி எடுக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் இந்த ஆண்டு டிஸ்னி ப்ளஸில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web