கார் மோதி இளம்பெண் பலி... பிரபல கன்னட நடிகர் கைது.. பரபரக்கும் திரைத்துறை!!

 
நாகபூஷணா

பிரபல கன்னட நடிகர் நாகபூஷணா. இவர் சமந்தாவின் ‘யூ டர்ன்’  படத்தில் நடித்ததில் பிரபலமானவர். இவரின் கார் மோதியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகபூஷணா


 2018ல் இருந்து கன்னட படங்களில் நடித்து வரும் நாகபூஷனா  பெங்களூரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிறகு வீடு திரும்பும் வழியில்  உத்தரஹல்லியில், நடைபாதையில் சென்றுக் கொண்டிருந்த தம்பதி மீது நாகபூஷணாவின் கார் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்   படுகாயம் அடைந்த இருவரையும் நாகபூஷணா தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் பெண் உயிரிழந்துள்ளார்.

நாகபூஷணா

படுகாயம் அடைந்த பெண்ணின் கணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து குறித்து  வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாகபூஷணா கவனக்குறைவாக காரை இயக்கியதே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறி நடிகரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!