மதுவை ஊற்றி , உருட்டுக்கட்டையால் அடித்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் வெறிச்செயல்...!!

 
பிரபுஷா

கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை பகுதியில் வசித்து வருபவர் 28 வயது சீனு. இவரது  மனைவி பிரபுஷா.   இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு 3 மற்றும் 1 வயது என இரு குழந்தைகள்.  இந்நிலையில் பிரபுஷாவுக்கும், நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புரம் பகுதியில் வசித்து வரும்  சதாம் உசேனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.  சில நாட்களுக்கு முன் கணவனுக்கு தெரிந்ததால் தற்காலிகமாக பிரிந்தனர்.  மீண்டும் சச்சரவு தொடரவே கணவன் மனைவி பிரிந்தனர்.

பிரபுஷா

இந்த பிரிவினையில்  சீனுவிடம் மூத்த குழந்தையும், பிரபுஷாவிடம் 2வது குழந்தை அரிஸ்டோ பியூலனும் இருந்தனர். சீனுவை பிரிந்த பிரபுஷா, முகமது சதாம் உசேனுடன் தூத்துக்குடியில் வாடகை வீட்டில் குடியேறினார். குழந்தை அரிஸ்டோ பியூலனும்  இருந்தான். இவர்கள் இருவரும் நவம்பர்   14ம்தேதி,  மயிலாடி அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலைக்கு வந்தனர். கோழிப்பண்ணை அருகில் உள்ள வீட்டில் இவர்கள் தங்கி இருந்தனர்.  இரவு குழந்தைக்கு திடீரென உடல் நிலை சரியில்லை என கூறி  கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  


குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததுடன், குழந்தை மீது மது வாடை வீசியதால் மருத்துவர்கள் சந்தேகமடைந்தனர். உடனடியாக  மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசார் வந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபுஷா, முகமது சதாம் உசேனிடம் தீவிர  விசாரணை நடத்தினர்.  அதில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை அரிஸ்டோ பியூலனுக்கு மது கொடுத்து  அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.  இது குறித்து போலீசார் விடுத்த செய்திக்குறிப்பில் “ நேற்று முன்தினம் இரவு இருவரும் உல்லாசமாக இருந்த போது திடீரென குழந்தை அரிஸ்டோ பியூலன் அழுதுள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த முகமது சதாம் உசேன், குழந்தையை தூங்க வை என கோபமாக கூறிவிட்டார்.   ஆனால் குழந்தை தூங்காமல் அழுது கொண்டே இருந்தது. இதனையடுத்து இருவரும் சேர்ந்து மதுவை  குழந்தைக்கு  கொடுத்தனர். குழந்தை குடிக்க மறுத்ததால், ஸ்பூன் மூலம் வாயில் ஊற்றினர்.  அப்போது ஸ்பூன் இடித்ததில் வாயில் காயம் ஏற்பட்டது.

போலீஸ்
 வாயில்  காயம் ஏற்பட்டதில் குழந்தை அலறி துடித்தது. இதனால் விசாரித்த அக்கம்பக்கத்தினரிடம்  காய்ச்சல் அடிப்பதாகவும், மருந்து குடிக்க அடம் பிடிப்பதாகவும் கூறி இருவரும் சமாளித்துள்ளனர். பின்னர் அழுகையை நிறுத்து என கூறி உருட்டு கட்டையால் முதுகில் அடித்ததில் சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி பரிதாபமாக இறந்தது. பின்னர் யாருக்கும் தெரியாமல் குழந்தையை புதைத்து விட வேண்டும் என திட்டமிட்டனர். ஆனால் அக்கம் பக்கத்தினரை சமாளிக்க  மருத்துவமனைக்கு தூக்கி வந்தது தெரிய வந்தது.  இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த  பிரபுஷா   மற்றும் சீனுவின் உறவினர்கள்  குழந்தையின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.   குழந்தையை வளர்க்க முடிய வில்லை என்றால் எங்களிடம் தந்து இருக்கலாமே எனக்கூறி  சீனுவின் குடும்பத்தினர் கதறினர். 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!