பெளர்ணமி கிரிவலம்... இன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கோங்க. இன்று அக்டோபர் 6 ம் தேதி திங்கட்கிழமை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு
திருவண்ணாமலை கோயில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 8 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இன்று அக்டோபர் 6 ம் தேதி காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் மெமு ரயில், திருக்கோயிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11.45 மணிக்கு  சென்றடையும்.திருவண்ணாமலை
அதே போன்று இந்த ரயில் மறு மார்க்கமாக பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு திருக்கோயிலூர் வழியாக பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?