நாளை சென்னையின் முக்கியப் பகுதிகளில் மின் தடை ... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!

 
மின் தடை
 

 


தமிழகத்தில் மாதாந்திர  பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 30ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை நகரின் பல முக்கிய பகுதிகளில்  மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் காலை 9மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும்படி  மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன்படி சென்னையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் 

மின் தடை
சென்னையின்  மின் தடை பகுதிகள்
அண்ணாநகர் மேற்கு: ஜே பிளாக், வைகை காலனி, 13வது மெயின் ரோடு, வள்ளலார் குடியிருப்பு, தங்கம் காலனி, 17வது மெயின் ரோடு, திருவள்ளுவர் குடியிருப்பு, திருமூலர் காலனி, 18வது மெயின் ரோடு, மலர் காலனி, கம்பர் காலனி, 19வது மெயின் ரோடு, தென்றல் சாலை, எச்15 காலனி, மேலின் 11வது பிரதான சாலை, ஏபி பிளாட், சி செக்டர், W பிளாக், இமயம் காலனி, கைலாஷ் காலனி ஆகியவை.
ஆவடி: சி.டி.எச்.ரோடு, காந்தி நகர், கவரப்பாளையம், சிந்து நகர், டி.ஆர். நகர், பெரியார் தெரு, முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயில் காவல் நிலையம், BSNL - சிடிஎச் சாலை,எச்விஎப் சாலை, ஆவடி பேருந்து நிலையம், சோதனைச் சாவடி, என்எம் சாலை, நந்தவன மேட்டூர், கஸ்தூரிபாய் நகர், கன்னிகாபுரம், நேரு பஜார் ஆகிய பகுதிகள்.

மின் கட்டணம்
பஞ்செட்டி: கவரப்பேட்டை, கீழ்முதல்பேடு, மேல்முதலம்பேடு, தண்டலச்சேரி, சோம்பட்டு, கிளிக்கொடி, பண்பாக்கம், ஆரணி, வடகுநல்லூர், பாலவாக்கம், துரைநல்லூர், போண்டவாக்கம், சின்னம்பேடு, கரணி, புதுவொயல், பெருவொயல், இராசபாவம், கொழும்பேடு ஆகியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web