வீடியோ... மிகவும் மகிழ்ச்சி... சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா !!

 
பிரக்ஞானந்தா

இந்திய கிராண்ட் மாஸ்டர்  பிரக்ஞானந்தா  உலக கோப்பை செஸ் போட்டியில் கலந்து கொண்டு இறுதி போட்டியில் கார்ல்சனிடம் தோல்வி அடைந்தார்.  வெள்ளி பதக்கத்துடன் சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  தமிழக அரசு வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார் . அவருக்கு  மக்கள் திரண்டு நின்று அமோக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு  தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.   உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்சம் வழங்கப்பட உள்ளது 

 உலகின் நம்பர் 1 வீரரும் 5 முறை சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் 18 வயது நிரம்பிய பிரக்ஞானந்தாவும் மோதினர்.  2 ஆட்டங்கள் நிரம்பிய இந்த டைபிரேக்கரில் முதலில் ஒயிட் காயின் வைத்து பிரக்ஞானந்தா விளையாடினார்.டை பிரேக்கர் சுற்றை பிரக்ஞானந்தா தனது கட்டுப்பாட்டில் வைத்து விளையாடியும் தோல்வியை தழுவினார். தொடக்கம் முதலே  பொறுமையாகவும், நிதானமாகவும் ஆடினார்.  எனினும், முதல் டை பிரேக்கரில் பிரக்ஞானந்தாவை, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை  வீழ்த்தினார்.

பிரக்ஞானந்தா

இதையடுத்து, 2வது டை பிரேக்கர் நடந்தது. இதில், கண்டிப்பான முறையில் பிரக்ஞானந்தா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எனினும், இந்த 2வது டை பிரேக்கர் சுற்றானது டிராவில் முடிந்த நிலையில், மேக்னஸ் கார்ல்சன் முதல் முறையாக FIDE World Cup சாம்பியனானார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web