பீகார் தேர்தலில் போட்டியிடுவேன்... பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!

 
பிரசாந்த் கிஷோர்
 

பீகார் தேர்தலில் போட்டியிடுவேன். வேட்பாளர் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம்பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டசபைக்கு வரும் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களம் காண்கிறது. 

பிரசாந்த் கிஷோர்

இதுதொடர்பாக நேற்று பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஜன் சுராஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருகிற 9ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்.வேட்பாளர் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம்பெறும். வேட்பாளர் பட்டியல் ஆச்சரியம் நிறைந்ததாக இருக்கும்’ என்று  கூறினார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?