என்னை அரெஸ்ட் பண்ணுங்க... பிரசாந்த் கிஷோர் சவால்!
பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, பிரஷாந்த் கிஷோர் கடுமையாக எதிர்வினை தெரிவித்துள்ளார். பீகார் தேர்தல் முன் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம், பீகாரின் கர்கஹார் தொகுதி மற்றும் மேற்கு வங்கத்தின் பபானிபூர் தொகுதியில் பிரஷாந்த் கிஷோரின் பெயர் இடம்பெற்றிருப்பதை கண்டறிந்து, மூன்று நாட்களில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த பிரஷாந்த் கிஷோர், “என் பெயர் இரண்டு வாக்காளர் பட்டியலில் இருந்தால், பீகாரில் நடைபெற்ற சிறப்பு திருத்தத்தின் போது ஏன் நீக்கப்படவில்லை என்பதையும் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். அது என் தவறு என்றால், என்னை கைது செய்யுங்கள்” என சவால் விட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிரஷாந்த் கிஷோரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
