பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான போட்டியாளர்... பரபரப்பு!!

தற்போதைய தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பது பிக்பாஸ். இந்நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தமிழில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஹிந்தி , தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தி பிக் பாஸ் சீசன்களை பொறுத்தவரை தற்போது 17வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல 2017 ல் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் தற்போது 7வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இதனை உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர் கர்ப்பமான சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
இந்தியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் 17' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அங்கிதா லோகாண்டே தனது மாதவிடாய் காலத்தை தவறவிட்டதாகவும் இதனால் கர்ப்ப பரிசோதனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அங்கிதா லோகாண்டே பிரபல பாலிவுட் திரைப்பட நடிகை ஆவார். சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட தோனி பட புகழ் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் காதலி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!