கேப்டனை கையில் தாங்குவேன்... டாட்டூ போட்டு கொள்ளும் பிரேமலதா.. .வைரல் வீடியோ... !

 
பிரேமலதா

தமிழ் திரையுலகில் கேப்டனாகவும், தேமுதிக தலைவராகவும் இருந்த நடிகர் விஜயகாந்த் டிசம்பர் 28ம் தேதி உடல் நலக்குறைபாட்டால் காலமானார்.  கேப்டனின்  உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திரைத்துறையினர்,  தொண்டர்கள்,   ரசிகர்கள்,  பிரபலங்கள் பொதுமக்கள் என 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  

அதன்பிறகு அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலத்தில் அரசு மரியாதையுடன்  நல்லடக்கம் செய்யப்பட்டது.    இன்னமும் தற்போது வரை தினமும் விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலர்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்நிலையில் விஜயகாந்த் உருவத்தை பிரேமலதா டாட்டூ குத்தியுள்ளார் .

பிரேமலதா

தேமுதிக தலைவர் விஜயகாந்த்   உருவத்தை தன்னுடைய வலது கையில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா டாட்டூவாக வரைந்துள்ளார். பிரேமலதா குத்தியுள்ள டாட்டூவில்  விஜயகாந்த் சிரித்தப்படி உள்ள புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி தொண்டர்கள் கேப்டன் ரசிகர்களிடையே பெரும் ட்ரெண்டாகி  வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web