சுழன்றடிக்கும் பிரேமலதா... தொண்டர்கள் உற்சாகம்... நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

 
பிரேமலதா விஜயகாந்த்

தேர்தல் திருவிழா தமிழகத்தில் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. இளைஞரணி மாநாடு நடத்தி முடித்து, தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கிறது திமுக. இந்நிலையில், நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா. இந்த தேர்தலில் விஜய் பங்கு பெறாத நிலையில், தேமுதிகவின் வாக்குகள் சிதறாமல் அதிகரிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவை ஆதரித்தால், காங்கிரஸ் கூட்டணிக்குள் கலந்து விடுவோம். அதனால், மத்தியில் பொறுப்புகள் கிடைக்காது என்று  மாநில கட்சிகள் கலக்கத்தில் இருக்கின்றன. இன்னொருபுறம் மம்தா, காங்கிரஸ் கட்சி இந்தியளவில் 40 தொகுதிகளை வெல்லுமா? என்று இண்டியா கூட்டணிக்குள் இருந்துகொண்டே கல்லெறிந்திருக்கிறார்.

இந்நிலையில், திமுக கூட்டணிக்குள் நிச்சயமாக தேமுதிக செல்லாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேமுதிக பாஜக கூட்டணியில் செல்லவே வாய்ப்புகள் அதிகம் என்றும், விஜயகாந்த் மீது மோடி தனி பிரியம் வைத்திருப்பதையும் கோடிட்டு காட்டுகிறார்கள். 

தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் திடீர் மறைவு தமிழக மக்களை நிலைகுலைய செய்துள்ள நிலையில், வரும் தேர்தலில் இது எதிரொலிக்குமா என்பது கேள்விக்குறியாக நீடித்து வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டும் விஜயகாந்த் மீது தமிழக மக்கள் தனி பிரியம் வைத்திருந்தனர். இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நாளை பிப்ரவரி7ம் தேதி முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற உள்ளது.
தேமுதிக
அந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதிமுக, பாஜக ஆகிய இரண்டு அணிகளும் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க விரும்பும் நிலையில், இது வரை தேமுதிக தனது நிலையை அறிவிக்கவில்லை. இந்நிலையில் நடைபெறவுள்ள மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கியமான முடிவு எடுக்கப்படும் என அந்தக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னை திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
கண்டிப்பாக திமுக கூட்டணிக்குச் செல்ல வாய்ப்பு இல்லை என அடித்துச் சொல்லும் கேப்டனின் சொந்தங்கள் அண்ணியாருக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை கொடுத்து விட்டு அன்றைய கூட்டம் சஸ்பென்ஸோடு முடியும் என்கிறார்கள் நாம் விசாரித்த சோர்ஸ்கள்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web