பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக தலைவராக நியமனம்!!

 
பிரேமலதா விஜயகாந்த்

 
தேமுதிகவின் பொருளாளராக 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த், தற்போது பொதுச் செயலாளராகியுள்ளார். 2011 தேர்தலில் தேமுதிகவுக்காக பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா, 2018ல் பொருளாளர் ஆனார். கட்சியின் நிறுவன தலைவராக மட்டும் விஜயகாந்த் தொடர்கிறார்.2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. அப்போது, எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் அமர்ந்தார். அதன்பிறகு அவரது பேச்சு, நடவடிக்கை, செயல் என அனைத்தும் மாற தொடங்கியது. திமுக, அதிமுகவிற்கு தமிழ்நாட்டில் மூன்றாவது அணியாக உருவெடுத்த தேமுதிக கட்சி, அதன்பிறகு மெல்ல மெல்ல காணாமல் போக தொடங்கியது.

விஜயகாந்த்

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதனால் அவருக்கு சரிவர பேச முடியாத செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் தேமுதிகவின் பொருளாளரான   பிரேமலதாவே கட்சியை நடத்தி வந்தார். 2016ல்  சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்த்தை காட்டியே வாக்குவங்கியை தக்க வைத்து வந்தனர்.   கொரோனா கால கட்டத்தில் அவரது உடல்நிலை முழுவதும் மோசமடைந்தது. இந்நிலையில், அவரது முகத் தோற்றமும் மாறத் தொடங்கியதால் எந்த நிகழ்வாக இருந்தாலும்  விஜயகாந்துடன் அவர் குடும்பத்தினர் புகைப்படம் எடுக்கும்போதெல்லாம் அவருக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டு உள்ளது.  அடுத்த ஆண்டு   நாடாளுமன்ற தேர்தல்  நடைபெற உள்ள நிலையில் இந்தியா  கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேமுதிக-வை புறக்கணித்துள்ளது. இந்நிலையில், கட்சிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் கட்சியில்  மாற்றங்கள் நிகழும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்த்


 திமுகவில்  கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த போது  செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டு, கட்சி பணிகளை தொடர்ந்து செய்து வந்தார். அதே பாணியில்  கட்சியின் பொருளாளராக இருந்த பிரேமலதாவை தேமுதிக-வின் பொதுச்செயலாளராக விஜயகாந்த் நியமித்துள்ளார். பொது செயலாளர் என அறிவித்ததும்  மேடையில் விஜயகாந்த் காலில் விழுந்து பிரேமலதா வணங்கினார்.அத்துடன் , நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் உள்ளது எனவும்  தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 மேலும்  “நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கழக தொண்டர்கள் அனைவரும் ஒருமையுடனும், முழுவேகத்துடனும் பணிபுரிய வேண்டும் என   இந்த பொதுக்குழு உறுதிகொள்கிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றியும், தேர்தல் யுத்திகளை வழிவகுக்கவும் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த்துக்கு   முழு அதிகாரம் வழங்கி தேமுதிக பொதுக்குழு இத்தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web