ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம்.... இன்றும் நாளையும் பக்தர்களுக்கு தடை!
ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான நாளை (அக். 22) ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதையொட்டி அவர் இன்று (அக். 21) கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வருகிறார். இன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், நாளை காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்று அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்றடைவார்.
அங்கிருந்து இருமுடி கட்டி, தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனத்தில் சன்னிதானம் சென்று பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்வார். பின்னர் சன்னிதானத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் நிலக்கல் திரும்பி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் புறப்படுவார். அதன் பிறகு வர்க்கலாவில் நாராயண குரு ஆசிரம நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக 24 ஆம் தேதி வரை கேரளாவில் தங்கவுள்ளார்.
ஜனாதிபதி சபரிமலைக்கு வருவதையொட்டி இன்று மற்றும் நாளை பக்தர்களின் தரிசனம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த 2 நாட்களுக்கு ஆன்லைன் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
