இன்று கேரளா வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு... நாளை சபரிமலையில் தரிசனம்.. பக்தர்களுக்கு தடை!

 
திரௌபதி முர்மு

திருவனந்தபுரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (அக்டோபர் 21) கேரளா மாநில வருகை தருகிறார். ஐப்பசி மாத பூஜை நிறைவு நாளான நாளை (22-ந்தேதி) அவர் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

ஜனாதிபதி முர்மு, இன்று திருவனந்தபுரம் வந்து கவர்னர் மாளிகையில் இன்றிரவு தங்கவுள்ளார். நாளை காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல்லிற்குச் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை அடைந்து, இருமுடி கட்டிய பின்னர் தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் நோக்கி கிளம்புகிறார்.

சபரிமலை

பகல் 12.30 மணியளவில் தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் சற்று ஓய்வெடுத்து, நிலக்கல் வழியாக மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் திரும்புவார். அதன் பின்னர் வர்க்கலாவில் உள்ள நாராயண குரு ஆசிரம நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து, 24-ந்தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள உள்ளார்.

சபரிமலை கூட்டம்

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, சபரிமலையில் இன்று மற்றும் நாளை (21, 22) பக்தர்களின் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?