போக்குவரத்து ஊழியர் கொலை விவகாரம்.. தேவாலய பாதிரியார் நீதிமன்றத்தில் ஆஜர்..!

 
சேவியர் குமார்

தேவாலய வளாகத்தில் போக்குவரத்து ஊழியரை அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ரான்சன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோட்டை சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 45). அரசு போக்குவரத்து கழக ஊழியரான இவர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாகவும் இருந்தார். இவர் கடந்த 20ஆம் திகதி மாலை மயிலோடு புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் சேவியர் குமார்

இச்சம்பவம் தொடர்பாக தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் இரணியல் வழக்கறிஞர் ரமேஷ்பாபு, பாதிரியார்கள் ராபின்சன், பெனிட்டோ உள்பட 15 பேர் மீது இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியார்கள் ராபின்சன், பெனிட்டோ உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாதிரியார் ராபின்சன் (30) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைத்து, வரும் 29ம் தேதி இரணியல் குற்றவியல் நீதித்துறை முன் ஆஜர்படுத்த திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் வரதராஜன் உத்தரவிட்டார்.

மாயமான பாதிரியார் ராபின்சன்

அதன் அடிப்படையில் ரெவரெண்ட் ராபின்சன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே நீதிமன்றத்தில் சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் நீதிமன்றத்தின் பின்வாசல் வழியாக அழைத்துச் சென்றதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web