பீகார் தேர்தல்... பிரதமர் மோடி பிரச்சாரத்தைத் தொடங்கினார்!
பீகார் சட்டப்பேரவைக்கு (243 உறுப்பினர்கள்) நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதி இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு நவம்பர் 14ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அப்போழுது, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தை இன்று (அக்டோபர் 24) தொடங்கினார். அவர் பிகாரின் சமஸ்திபூருக்கு வருகை தந்து, பாரத ரத்னா கர்பூரி தாக்குர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கர்பூரி தாக்குர் குடும்பத்தினருடன் உரையாடினார். இதில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் உடனிருந்தார்.

பிரதமர் மோடி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராய் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளார். மேலும், அக்டோபர் 30, நவம்பர் 2, 3, 6, 7 தேதிகளில் பீகாரின் பல இடங்களில் பிரதமரின் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற பாஜக திட்டமிட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
