நாளை பிரதமர் மோடி சென்னை வருகிறார்... இரு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை!

 
மோடி ட்ரோன்

நாளை மார்ச் 4-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், சென்னை கல்பாக்கம் பகுதிகளில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாளை சென்னை நந்தனம் மைதானத்தில் நடைப்பெற உள்ள  பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மோடியின் சென்னை வருகையையொட்டி கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

மோடி

நாளை பகல் 1.15 மணிக்கு மராட்டியத்தில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு மதியம் 2.45க்கு வந்தடையும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு கல்பாக்கம் ஹெலிபேடு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று மதியம் 3.30 முதல் மாலை 4.15 வரை கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தைப் பார்வையிடுகிறார். அதன் பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக  மாலை 5 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலைய ஹெலிபேடு தளத்து வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை நந்தனம் பொதுக்கூட்ட திடலுக்கு மாலை 5.10 மணிக்கு வருகிறார்.

மோடி
மாலை 6.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மாலை 6.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்றடைந்து, மாலை 6.35 மணிக்கு சென்னையில் இருந்து தெலுங்கானா நோக்கி விமானத்தில் புறப்பட்டு சென்று, தெலுங்கானாவை இரவு 7.45 மணிக்கு சென்றடைகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web