பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 
பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாள்..  முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 74வது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


குஜராத் முதல்-மந்திரியாக நான்கு முறையும், நாட்டின் பிரதமராக 3வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மாநில கவர்னர்கள், மத்திய மந்திரிகள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.


 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை