இளவரசி டயானாவின் கவுன்கள் ஏலத்திற்கு!!

 
டயானா

 சாதாரண பெண்ணாகப்  பிறந்து வேல்ஸ் இளவரசர் சார்லசை மணந்து இங்கிலாந்து இளவரசியானவர் டயானா. இவர் அதுவரை இருந்த அரச வரைமுறைகளை தாண்டி எளிய மக்களிடம் அன்பு கொண்டிருந்தார்.  அரச சுகபோக வாழ்க்கைக்கு  பழக்கப்படாமல்  ,பொதுவாழ்க்கையிலும் புகழின் உச்சியை தொட்டவர்.சார்லசை மணந்தது முதல் மரணம் வரை உலகத்தின் முக்கிய சர்ச்சையானவர். அதுவரை  அரச குடும்பத்தினர் என்றாலே  இறுக்கமான முகம். நீ சாமானியன், நாங்கள் ராஜவம்சத்தினர் என்கிற தோரணை. நிலப்பிரபுத்துவ மனோபாவம். தங்க வட்டத்துக்குள் ராஜ வாழ்க்கை என்று இருந்தனர்.

டயானா

டயானா அத்தனையும் உடைத்து நான் வேற மாதிரி என நிரூபித்தவர்.   அடித்தட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்து   உலகத் தொழு நோயாளிகள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் என அத்தனை பேரையும் சிநேகிதமாக கொண்டிருந்தார்.   எய்ட்ஸ் நோயாளிகளைத் தொட்டுப் பேசுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உலகுக்கு முதன் முதலில் தெரிவித்தவர் டயானாதான். தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா. அன்னை தெரசாவை சந்தித்த பிறகு  தன் 79 விலையுயர்ந்த உடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த பெரும் தொகையை தர்மகாரியங்களுக்கு செலவிட்டவர்.   

டயானா

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்திருந்த 3 கவுன்கள் ஏலம் விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்  செப்டம்பர் 6  முதல் 8ம் தேதி வரை பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெறும் ஏலம் விடப்படுகின்றன.  1997ல்  டயானா விபத்தில் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுக்காக தமது 70 கவுன்களை ஏலம் விட்டிருந்தார்.  அதில் 3 கவுன்களை ஏலம் எடுத்த மிச்சிகனை சேர்ந்த எலன் பெத்தோ என்ற பெண்மணி சமீபத்தில்  காலமானார். இதனையடுத்து  அவரிடம் இருந்த டயானாவின் உடைகள் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளன.   இந்த 3 கவுன்களில் டயானா பல முறை அணிந்த, முழுவதும் சிவப்பு நிறத்தில் உள்ள கவுன், அதிகப்படியாக 4 லட்சம் டாலர் வரை ஏலம் போகலாம் என   எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web