திமுக முன்னாள் அமைச்சர் மகன்கள், மகளுக்கு சிறைத்தண்டனை.. பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
செங்குட்டுவன்

 தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்  திருச்சி வேலக்குறிச்சி அமைச்சர் செங்குட்டுவன்.அந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.  

செங்குட்டுவன்

2013ல் அதிமுகவில் சேர்ந்து 2021ல் மீண்டும்   திமுகவில் சேர்ந்தார்.இந்நிலையில் 2021ல்  கொரோனாவால்  பாதிக்கப்பட்ட செங்குட்டுவன் அதிலிருந்து  மீண்டு   மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.  சொத்துக்குவிப்பு வழக்கு திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்   தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

 

செங்குட்டுவன்

 

அதில், செங்குட்டுவனின் மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல் மற்றும் மகள் மீனாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இவர்களுடன் செங்குட்டுவனின் சகோதரர் மகள் வள்ளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web