நீதிமன்றத்தில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி கீழே குதித்து படுகாயம்!

 
கைதி
 

 

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த டிரைவர் கார்த்தி (37) மீது பவானி அனைத்து மகளிர் போலீசில் போக்சோ வழக்கும், அந்தியூர் போலீசில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதி

நேற்று வழக்குத் தொடர்பாக ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவை மத்திய சிறையில் இருந்து கார்த்தியை ஆயுதப்படை போலீசார் மதியம் 12.30 மணியளவில் அழைத்து வந்தனர். விசாரணை முடிந்த பின் மதியம் 3 மணியளவில் நீதிமன்றத்திலிருந்து கிளம்பத் தயாரானபோது, தப்பிச் செல்லும் நோக்கத்தில் அவர் முதல் மாடி கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து கீழே குதிக்க முயன்றார். போலீசார் அவரது சட்டையைப் பிடித்து தடுக்க முயன்றாலும், அவர் 15 அடி உயரத்தில் இருந்து குதித்தார்.

உத்தரபிரதேச போலீஸ்

இதனால் கார்த்தி இடுப்பு மற்றும் கால்களில் காயமடைந்தார். உடனடியாக போலீசார் அவரை பிடித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மீண்டும் தப்பிச் செல்லாமல் இருக்க மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!