50 மாணவர்களை காப்பாற்றி மாரடைப்பால் பள்ளிப்பேருந்து ஓட்டுனர் மயங்கி பலி!!

 
பள்ளிப்பேருந்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நாமல்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சீனப்பா.  இவர் கடந்த 20 வருடங்களாக தேன்கனிக்கோட்டை  பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவரது பிள்ளைகளும் அதே பள்ளியில் படித்து வருகின்றனர் நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் சீனப்பா மாணவர்களை ஏற்றிக் கொண்டு பேருந்தை ஓட்டிச்  சென்றார்.

மரணம் மாரடைப்பு நெஞ்சுவலி

ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 50 மாணவர்களுடன் பேருந்து சென்று கொண்டிருந்த போது  சீனப்பாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.தாங்கமுடியாத நெஞ்சு வலியிலும் பள்ளிப்பேருந்தை   காந்திநகர்   சாலையோரமாக கொண்டு சென்று நிறுத்தி விட்டார்.   மாணவர்களிடம் சொல்லிக் கொண்டே  பேருந்தில் இருந்து கீழே இறங்கிய சீனப்பா  மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீஸ்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சீனப்பாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையிலும் பேருந்தில் இருக்கும்  50 பள்ளி மாணவ, மாணவிகளின் உயிரை காக்க பேருந்தை ஓரம் கட்டிய இந்த செயல் அப்பகுதி முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சீனப்பாவின் செயலை நெகிழ்ச்சியுடன் பேசி  பெற்றோர்கள் பலரும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web