ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை .... தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி அதிரடி!

 
பிரியங்கா காந்தி
 

பீஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி வெற்றி பெற்றால், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உறுதி அளித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சோன்பர்சா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பீஹார் மக்களின் உழைப்பும் பங்களிப்பும் நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படையாக உள்ளதாகக் கூறினார்.

பிரியங்கா காந்தி தனது உரையில், “நமது அரசியலமைப்பு வழங்கிய வாக்குரிமையை தேசிய ஜனநாயகக் கூட்டணி பறிக்கிறது. பீஹாரில் 65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்குரிமையை இழந்துள்ளனர், இது மக்களுக்கு எதிரான சதி” எனக் குற்றம் சாட்டினார். மேலும், தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பே பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் ரூ.10,000 வழங்குவதாக அறிவித்தது வாக்கு பெறும் முயற்சியாகும் என்றும், அந்த பணத்தை பெற்றுக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதேபோல், பீஹாரில் வேலைவாய்ப்பு இல்லாமை, விவசாயிகளுக்கு நியாயமான விலை இல்லாமை, தொழில்கள் சில பெரியவர்களின் கையில் சிக்கி இருப்பது போன்ற பிரச்சனைகளை அவர் எடுத்துரைத்தார். மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும், வினாத்தாள் கசிவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், தேர்வுக்கட்டணங்கள் ரத்து செய்யப்படும், ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும், ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார். பின்னர், ரோசெரா நகரில் நடைபெற்ற பேரணியிலும் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!