அதிர்ஷ்டம்... நாய் கவ்விய லாட்டரிக்கு பரிசுத் தொகை!

 
நாய்

அதிர்ஷ்டம் அது இஷ்டத்துக்கு யாருக்கு வேண்டுமானாலும் அடிக்கும். யாருக்கு   எப்போ கிடைக்கும்னு சொல்லவே முடியாது. அதே போல் ஒரு  அதிர்ஷ்டம்தான் ஒரு சீனப்பெண்ணுக்கு கிடைத்துள்ளது.  தெற்கு சீனாவில் வசித்து வருபவர்   லின் என்ற பெண். இவர்  பிப்ரவரி 15ம் தேதி தன் வளர்ப்புப் பிராணி  நாயுடன் குவாங்டாங் நகருக்கு ஷாப்பிங் செய்யச் சென்றார். திடீரென  அவருடைய நாய், ​​அவருடைய பிடியில் இருந்து நழுவி, அங்குமிங்கும் ஓடத் தொடங்கியது. இதனால் லின் அந்த நாயை விடாமல் துரத்தி சென்றார்.  

லாட்டரி

இறுதியில் அந்த நாய், லாட்டரி கடைக்குள் நுழைந்து லாட்டரிச் சீட்டு ஒன்றைக் கவ்விப் பிடித்தது. இதனால் அதனை வேறு வழியில்லாமல் காசு கொடுத்து வாங்கிவிட்டார்.  அதே லாட்டரிக்கு 139 டாலர் அதாவது  இந்திய மதிப்பில் ரூ.11,527 விழுந்தது.   இதனால் லின் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.   இதுகுறித்து அவர், "நான் மிகவும் ஆச்சரியப்பட்டுதான் போனேன். லாட்டரியில் இதற்குமுன் எனக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததில்லை” எனக் கூறியுள்ளார்.

டாலர்

இதே அதிர்ஷ்டத்தை நம்பி  மறுநாள் தன் செல்லப்பிராணியை அழைத்துக்கொண்ட லின், அதே லாட்டரி கடைக்குச் சென்று நாயை வைத்து வேறொரு சீட்டை எடுக்க வைத்தார். அந்த சீட்டிற்கு   வெறும் 4 டாலர்  அதாவது இந்திய மதிப்பில் ரூ. 331.74 தான்  கிடைத்துள்ளது.  அடுத்தடுத்து  அதிர்ஷ்டத்தைத் தேடித் தந்த செல்லப் பிராணிக்கு உணவு வாங்கிக் கொடுத்து உற்சாகம் அடைந்துள்ளார் லின்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web