நைட்ரஜன் வாயுவை சுவாசித்து பேராசிரியர் தற்கொலை....!!

 
நைட்ரஜன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி புரத்தில் வசித்து வருபவர் தனபிரபு. இவர்  கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வேதியியல் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்   சிங்காநல்லூர் அருகே உப்பிலிபாளையம் பாரதி நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.  தனபிரபு கல்லூரியில் உள்ள வேதியியல் ஆய்வுக்கூடத்தில் நைட்ரஜன் வாயு குறித்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.   திடீர் என்று பணியை ராஜினாமா செய்தார்.  ஆனாலும், மாணவர்களை வீட்டுக்கு அழைத்து சிறப்பு வேதியியல் வகுப்புகளை நடத்திவந்தார்.  இதற்காக நைட்ரஜன் வாயு சிலிண்டர் ஒன்றை வாங்கி வைத்திருந்தார்.

நைட்ரஜன்

இந்நிலையில் தனபிரபு காலை வெகுநேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவே இல்லை.  இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர் ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை மேலும், வீட்டிலிருந்து ஏதோ  ஒரு வாயு வெளியே வந்து கொண்டிருந்தது.  அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  வீட்டை உடைத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.  நைட்ரஜன் வாயு சிலிண்டர் திறந்து இருந்தது அதை உடனடியாக போலீசார் மூடினர். மேலும் அதன் அருகில் தனபிரபு பிணமாக கிடந்தார் அங்கு ஒரு கடிதம் இருந்தது அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனக்  குறிப்பிடப்பட்டிருந்தது.  

ஆம்புலன்ஸ்


இதனால், சிலிண்டர் திறந்துவிட்டு நைட்ரஜன் வாயு முகர்ந்து தனபிரபு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது   உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர்   அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இது குறித்து போலீசார்  விடுத்த செய்தியில்  “ இன்னும் தனபிரபுவுக்கு திருமணம் ஆகவில்லை, வங்கியில் லட்சக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்துள்ளார்.  பங்கு சந்தையிலும்  அதிக  அளவில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.   அதில் அவருக்கு  பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  அதனால் தற்கொலை செய்துகொண்டரா என்பது தெரியவில்லை . விசாரணை தொடரும்” எனக் கூறியுள்ளனர்.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web