சரக்கு லாரியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் சரக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .
தூத்துக்குடி மடத்தூர் சாலையில் முருகேசன் நகர் பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.
அதில், தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்துள்ளன. அவற்றின் சந்தை மதிப்பு ரூ. 2 லட்சம் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
