சர்ச்சை சட்ட மசோதா... அத்தை மகன், மாமன் மகளை திருமணம் செய்யத் தடை!
இந்தியாவில் சமீபகாலமாக மிக அதிகமாக மேற்கத்திய கலாச்சாரம் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் உத்தராகண்ட் மாநில பொதுசிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில் பிப்ரவரி 6ம் தேதி இந்தியாவிலேயே முதன் முறையாக பொது சிவில் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யுசிசி மசோதா திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, லிவ்-இன் உறவுகள் அனைத்திலும் மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதன்படி
பலதார திருமணத்துக்கு தடை
லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.
தவறுபவர்களுக்கு 6 மாதம் சிறை அத்துடன் ரூ.25000 அபராதம் அல்லது சூழ்நிலைக்கு ஏற்றபடி 2மே விதிக்கப்படும்.
மறுமணம், விவாகரத்துக்கும் பொதுவிதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி உயிருடன் கணவனோ மனைவியோ இருந்தால் மறுமணம் செய்யத் தடை.
ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைய வேண்டும்.
மதங்களின் அடிப்படையில் தங்கள் மதச் சடங்குகளின்படி திருமணம் செய்து கொள்ளலாம். எந்த மதமாக இருந்தாலும், என்ன சடங்காக இருந்தாலும் திருமணத்தை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.
இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க தொடங்கினால் அந்த திருமணம் செல்லாது.
விவாகரத்தைப் பொறுத்தவரை, தம்பதியரின் திருமணம் மீறிய தொடர்பு, கொடூரமாக நடந்துகொள்ளுதல், திருமணத்துக்குப் பிறகு குறைந்தது 2 ஆண்டுகள் பிரிந்திருத்தல் இருந்தால் விவகாரத்து பெற விண்ணப்பிக்கலாம்.
திருமணமான ஓராண்டுக்குள் விவாகரத்து கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது.
தந்தையின் சகோதரி மகன், மகள், தாயின் சகோதரரின் மகன், மகள் ஆகிய உறவுமுறைகளில் திருமணம் செய்யத் தடை.
அதாவது அத்தை, மாமன் முறையில் திருமணம் செய்து கொள்வது தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க