கல்வி சாரா நிகழ்ச்சிகளை நடத்த தடை... தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!

 
ஆசிரியர்கள்


 
சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் மகாவிஷ்ணுவின்  ஆன்மீக சொற்பொழிவு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவரை கைதுசெய்து  15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவிகள்
இந்நிலையில்  தமிழகம்  முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அதில் இனி அரசுப் பள்ளிகளுக்குள் அனுமதி இன்றி வெளியாட்களை பேசவோ, கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ அழைக்க அனுமதிக்க கூடாது.

ஆசிரியர்கள்

அதன் பிறகு உரிய அனுமதி இன்றி கல்வி சாரா நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர்களை தவிர்த்து பிறர் பாடம் நடத்தக்கூடாது. மதிய உணவுக்காக ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது.  ஆசிரியர்கள் மாணவர்களிடம் செல்போனில் பேசக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை